logo
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மரம்_நண்பர்கள் சார்பில் ரூ.10000 , வம்பன் தேநீர்க்கடைக்காரர் ரூ.20,000   வழங்கல்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மரம்_நண்பர்கள் சார்பில் ரூ.10000 , வம்பன் தேநீர்க்கடைக்காரர் ரூ.20,000 வழங்கல்

20/May/2021 08:14:29

புதுக்கோட்டை, மே: முதலமைச்சர் நிவாரணநிதிக்கு மரம்_நண்பர்கள் சார்பில் ரூ.10,000-மும்வம்பனில் தேநீர்கடையில் கடைக்காரர் சிவக்குமார் வைத்த மொய்விருந்து மூலம் கிடைத்த ரூ.20,000 -மும் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியிடம் வியாழக்கிழமை  வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

முதல்-அமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்று கோடிக்கணக்கான ரூபாய் முதல், தங்களால் இயன்ற நிதி வரை கோடீஸ்வரர்கள், பெரும் நிறுவனங்கள், அரசியல், சினிமா, வெளிநாடுவாழ் தமிழர்கள், ஆசிரியர் அமைப்பினர், கடைநிலை ஊழியர்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் நிதி அளித்து வருகின்றனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடியும், தனது ஒரு மாத ஊதியத்தையும் வழங்கினார். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏ-க்கள் தொகுதி நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளன.


இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரி மாணவி சார்பில் ரூ.11 ஆயிரம், விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் ரூ.75 ஆயிரமும் முதல்வர் நிவாரண நிதிக்கு  வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மரம்_நண்பர்கள் சார்பில் ரூ.10,000-மும் , மொய்விருந்து மூலம் கிடைத்த ரூ.20,000 -மும் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியிடம் வியாழக்கிழமை (20.5.2021) வழங்கப்பட்டது  இதில் நிர்வாகிகள், சிவகுமார், கார்த்திக்மெஸ் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Top