logo
மொடக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ரேஷன்கடைகளில்  கொரோனா நிவாரண நிதி வழங்கல்

மொடக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ரேஷன்கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கல்

19/May/2021 06:23:56

ஈரோடு மே: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளின் குடும்ப அட்டைதாரர்களுக்கு  கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக  கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட அவல்பூந்துறை, மொடக்குறிச்சி, குளூர், கஸ்பாபேட்டை, பள்ளியூத்து, கரியாக்கவுண்டன் வலசு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில்  நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அவல்பூந்துறை முன்னாள் பேரூராட்சித் தலைவரும், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சு.குணசேகரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கினார்.

சங்க தலைவர் சரவணன்அவல்பூந்துறை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் குகன் வெற்றிவேல், கஸ்பாபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமிதிமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் தர்மலிங்கம், பெரியசாமிமாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top