logo
ஈரோடு பெருந்துறை சிப்காட் தேசிய ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் சு.முத்துசாமி  ஆய்வு

ஈரோடு பெருந்துறை சிப்காட் தேசிய ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனத்தில் அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

19/May/2021 02:59:26

ஈரோடு மே: ஈரோடு பெருந்துறை சிப்காட் தேசிய ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனத்தை அமைச்சர் சு.முத்துசாமி  ஆய்வு மேற்கொண்டார்.

 ஈரோடு மாவட்டத்திற்கு, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள  தமிழக முதல்வர் மு..ஸ்டாலின்  நாளை (மே.20) வருகை தருவதையொட்டி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி; ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தேசிய ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் முக்கிய சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர், அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவதுஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் படுக்கை வசதி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மாநகரம் மற்றும்  மாவட்டத்திற்கு 24 மணி நேரமும் இயங்கும்  ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் கொரோனா நோய்த்தொற்று தொடர் பாக மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள், மெடிக்கல் ஆக்ஸிஜன் தேவைகள் குறித்த விவரங்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான விவரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் சு. முத்துசாமி.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சி.சைபுதீன் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Top