logo
பெருந்துறை அரசுஈரோடு மருத்துவக் கல்லூரி  மருத்துவ மனையில் கூடுதல் படுக்கை வசதி கட்டடபூமிபூஜை: அமைச்சர்.சு.முத்துசாமி பணிகளை தொடங்கி வைத்தார்.

பெருந்துறை அரசுஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கூடுதல் படுக்கை வசதி கட்டடபூமிபூஜை: அமைச்சர்.சு.முத்துசாமி பணிகளை தொடங்கி வைத்தார்.

17/May/2021 12:09:53

ஈரோடு மே: பெருந்துறையிலுள்ள அரசு    ஈரோடு மருத்துவக் கல்லூரி  மருத்துவ மனையில் கூடுதல் படுக்கை வசதி கட்டடத்துக்கான  பூமிபூஜை: அமைச்சர்.சு.முத்துசாமி பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

 

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசுஈரோடு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன்  தலைமையில்நடைபெற்றநிகழ்வில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமிபங்கேற்று கூடுதல் படுக்கை வசதி கட்டடத்திற்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


இதையடுத்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியது:

முதல்வர் மு..ஸ்டாலின்  ஆணைப்படி ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருந்துறை மருத்துவக் கல்லூரியானது கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்காக முழுமையாக இயங்குகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இன்று கூடுதல் படுக்கை வசதி கட்டடத்திற்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு முதற்கட்டமாக 300 படுக்கைகளும், அடுத்த கட்டமாக 200 படுக்கைகளும் என மொத்தமாக சுமார் 1000 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தொற்றின் ஆரம்ப கட்டத்தில், அதாவது அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை ஆர்- டி. பி சி ஆர்  பரிசோதனை மேற்கொள்வதற்காக ஒரு மையம், இம்மையத்தில் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்ட நபர்கள், சிகிச்சை மேற்கொள்ள தனி மையமும், தடுப்பூசி செலுத்த தனி மையமும் அமைக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் பரிசோதனை மேற்கொள்வதற்கும், மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக மையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதில் நோயாளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணிகள் நிறைவேற்றப்படும்.

 ஈரோடு மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என, பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தொற்று தொடர்பான விபரங்கள் குறித்து சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு தொற்று உள்ள நபர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து வரப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படும். கொரோனா சிகிச்சை மையங்களுக்காக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கெனஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் 150 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுபெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கென முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதில் 550 படுக்ககைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை பொது நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.

எனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களை மட்டும் அணுகி உரிய சிகிச்சையினை பெற வேண்டும். இங்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முழுமையாக நிறைவேற்றப்படவுள்ளது.

 

தற்பொழுது, ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளதுபொதுமக்கள் கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள், மெடிக்கல் ஆக்ஸிஜன் தேவைகள் குறித்த விவரங்கள்; மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு அவர்களை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஊரடங்கு காலத்தில் அரசின் அனைத்து கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். மிக அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். முககவசம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இத்தொற்று பாதிப்பில் இருந்து முழுமையான வெற்றியை அடைய இயலும். நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையிலும்பொதுமக்கள் சமூகஇடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம்அணிந்துகிருமிநாசினிகளை பயன்படுத்தவேண்டும்என்றார் அமைச்சர் சு. முத்துசாமி.

Top