logo
கொரோனாநிவாரண உதவித்தொகை: ரேஷன் கடைகளில்  வரிசையில் நின்று வாங்கிச் சென்றமக்கள்

கொரோனாநிவாரண உதவித்தொகை: ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று வாங்கிச் சென்றமக்கள்

16/May/2021 11:48:00

ஈரோடு, மே:கொரோனாநிவாரண உதவித்தொகை: ரேஷன் கடைகளில்  வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

தி.மு.., தேர்தல் அறிக்கையில், அரிசி கார்டு வைத்துள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தனர்.முதற்கட்ட தொகையாக, 2,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 1,152 ரேஷன் கடைகளில், 7 லட்சத்து, 13,910 ரேஷன் கார்டுகளுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக ரேஷன் பணியாளர்கள் வீடுகளில் சென்று டோக்கன் வினியோகித்தனர்.இதில் வர வேண்டிய நாள் நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முதல் மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ 2000 வழங்கப்பட்டது. மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன் உடன் நீண்ட வரிசையில் நின்று தொகையை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைமுழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட போதும்ரேஷன் கடைகள் மட்டும் இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும்ரூ 2000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. டோக்கன் கொடுத்து பணம் வாங்க வேண்டியவர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர்.

சமூக இடைவெளி கடைப்பிடித்து வட்டங்களுக்குள் நின்று மக்கள் தொகையை வாங்கி சென்றனர். ஒரு சில இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது. இந்தப் பணி இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும் என்றும், தனிமைப் படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தனிமை காலம் முடிந்தவுடன் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடையில் சென்று நிவாரண தொகையை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் வந்து ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரத்தை  வாங்கிச் சென்றனர்.

Top