logo
ஈரோட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 271 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

ஈரோட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 271 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

03/Mar/2021 10:27:12

ஈரோடு, மார்ச்: ஈரோடு சத்தி சாலை, மூலப்பட்டறை எல்ல மாரியம்மன் கோயில்  போன்ற பகுதிகளில்  2-ஆவது நாளாக  ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸார் ஆய்வாளக்  நாகராஜன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். 

மேலும் அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களிடம் ஓட்டுநர் உரிமம், பதிவு சான்று  உள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர். இதில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் தலைக்கவசம்  அணியாமல் வந்தனர். அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தலைக்கவசத்தின் அவசியம்  குறித்து அறிவுறுத்தப்பட்டது.


 சாலையின் இருபுறங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், பிளக்ஸ் போர்டுகள், பொருட்களை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங் களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை  மதியம் வரை  போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 271 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 


தொடர்ந்து போக்குவரத்து போலீஸார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் சீட் பெல்ட் போடாமல் கார்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கும், போனில் பேசியபடி இருசக்கர வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்

Top