14/May/2021 09:02:25
ஈரோடு மே: ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வந்து செல்ல இரண்டு வழிகளாக பிரிக்கப்படும் என்றார் வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி.
ஈரோடு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, திண்டல் ஊராட்சி முன்னாள் தலைவர் குமாரசாமி, வில்லரசம்பட்டி ஊராட்சி தலைவர் முருகேசன், முன்னாள் யூனியன் சேர்மன் எல்லப்பாளையம் சிவகுமார் உள்பட பலர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: ஈரோடு
அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது உள்ள ஒரு வழிப்பாதை இரண்டு வழிப்பாதைகளாக மாற்றப்படும். ஒரு வழியில் வழக்கமான நோயாளிகள் சென்று வரவும் மற்றொரு வழியில் கொரானா நோயாளிகளுக்கு என மாற்றம் செய்யப்படும்.
இங்கு 150 படுக்கை வசதியுடன் கூடிய
கொரானா நோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் இவ்வாறாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கபடுவதன் மூலம் நோய்த்தொற்று பரவல் தடுக்க முடியும். மேலும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையை முற்றிலுமாக கொரானா சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும்
மற்ற நோயாளிகள் அனுமதி கிடையாது.
மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தவிர வேறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் மாவட்டம் முழுவதும்
பத்து இடங்களில் இரண்டு பிரிவுகளாக பிரித்து
ஒன்று முதல் கட்ட பரிசோதனைக்கும் மற்றொன்று சிகிச்சை மையமாகவும் மாற்றப்படும்
பள்ளி கல்லூரிகள் தேவைக்கு ஏற்ப
கொரோனா தனிமை முகாம்களாக மாற்றப்படும்.
அதில் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகள் வீட்டில் தங்க வசதி இல்லாதவர்கள் இங்கு வந்து தங்கி கொள்ளலாம் அவர்களுக்கு
தேவையான உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள்
அனைத்தும் தயார் செய்து கொடுக்கப்படும். மாவட்டத்தில் 10 பேரும் தாலுகா 5 பேர் எனவும் ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அவர்கள்
24 மணி நேரமும் மூன்று சுற்றுகளாக செயல்படுவார்கள்.
இவர்களிடத்தில் கொரானா பற்றிய படுக்கை வசதி ஆக்சிஜன் போன்ற முழு தகவலும் தயார் நிலையில் இருக்கும் மக்கள் அங்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களைப் பெற்று சிகிச்சை பெற செல்லலாம் என்றார் அமைச்சர் முத்துச்சாமி.