13/May/2021 06:54:04
சென்னை, மே: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அரணையூரில் வியாழக்கிழமை காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.