logo
தமிழகத்தில்  புதிதாக 30,355 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா தொற்று

13/May/2021 08:30:50

சென்னை: தமிழகத்தில்  புதிதாக  1 லட்சத்து 49 ஆயிரத்து 853 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 17,442 ஆண்கள், 12,913  பெண்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 355 பேருக்கு நேற்று  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7,564 பேரும், கோவையில் 2,636 பேரும், செங்கல்பட்டில் 2,670 பேரும், திருவள்ளூரில் 1,344 பேரும், மதுரையில் 1,172 பேரும், கன்னியாகுமரியில் 1,076 பேரும், ஈரோட்டில் 961 பேரும், திருச்சியில் 879 பேரும், நெல்லையில் 742 பேரும் குறைந்தபட்சமாக அரியலூரில் 149 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 40 லட்சத்து 03 ஆயிரத்து 069 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 14 லட்சத்து 68 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 82 ஆயிரத்து 195 ஆண்களும், 5 லட்சத்து 86 ஆயிரத்து 631 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 162 பேரும், தனியார் மருத்துவமனையில் 131 பேரும் என 293 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16 ஆயிரத்து 471 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று  19,508 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 12 லட்சத்து 79 ஆயிரத்து 658 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன்  1 லட்சத்து 72 ஆயிரத்து 735 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Top