logo
முழு ஊரடங்கு எதிரொலி... காய்கறி,மளிகை கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்..டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம்

முழு ஊரடங்கு எதிரொலி... காய்கறி,மளிகை கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்..டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம்

09/May/2021 09:12:50


ஈரோடு, மே: முழு ஊரடங்கு எதிரொலி காய்கறி,மளிகை டாஸ்மாக் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டத்தால்  ஈரோடு நகரம் திணறியது. 

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் என்பதால் இன்று ஈரோட்டில் முக்கிய கடைவீதிகள், பெரிய மார்க்கெட், உழவர் சந்தை, டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

ஏற்கனவே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை  அன்று மூழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த து. இந்நிலையில் நாளை முதல் 14 நாட்களுக்கு தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு ள்ளதால்  முழு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு கடைகள் இரவு 9 மணி வரை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஞாயிற்றுக்கிழமை காலை முதலே  ஈரோடு வ.உ.சி பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி பெரிய மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. குறிப்பாக பெண்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது தொற்று காரணமாகப் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருந்தது.அதன்படி மார்க்கெட்டிங் நுழைவாயில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடித்து மக்கள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டது. காய்கறி வாங்கி முடித்த பொதுமக்கள் மற்றொரு வழியாக வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப் பட்டு இருந்தது. இதேபோல் உழவர் சந்தையிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. மளிகை பலசரக்கு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பத்து நாட்களுக்கு தேவையான மளிகை சாமான்கள் காய்கறிகளை அள்ளிச் சென்றனர்.

 இதேபோல் இன்று சலூன் கடைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததால் சலூன் கடைகள் காலை 6 மணி முதல் செயல்படத் தொடங்கியது. இதைப்போல் மீன், கோழி மட்டன் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கட்டம் போடப்பட்டு இருந்தது. அதில் பொதுமக்களின்  இறைச்சியை வாங்கி சென்றனர். மேலும் மாநகராட்சி சார்பில் நான்கு மண்டலத்திலும் சிறப்பு அலுவலர்கள்  நியமிக்கப்பட்டு கண்காணித்து வந்தனர். 

இதேபோல் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, ஆர்.கே.வி.ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கொங்கலம்மன் வீதிப் பகுதியில் மற்ற இடங்களைவிட பலசரக்கு சாமான்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் அங்கு கூட்டம் அதிகளவில் இருந்தது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் கூட்டத்தை கலைத்தனர்.


இதேபோல்  கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இன்னும் 14 நாட்க ளுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்பதால் இன்றும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. வேண்டிய சரக்குகளை பாட்டில் பாட்டிலாக அள்ளிச் சென்றனர். கிட்டத்தட்ட ஒருவாரத்துக்கு தேவையான சரக்குகளை ஒரு சிலர் அள்ளிச் சென்றனர். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக பீர் வகைகள் அதிகளவில் விற்பனை ஆனது.பொதுவாக டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூ 4 முதல் 5 கோடி வரை விற்பனையாகும்.

பண்டிகை இது போன்ற நாட்களில் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறும். நேற்று நல்ல விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை விட  ஞாயிற்றுக்கிழமை கூடுதல் விற்பனை நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Top