logo
புதுக்கோட்டை ரெட்கிராஸ் சங்கம், ஜெ.ஜெ. கல்லூரி யூத் ரெட்கிராஸ், அரசு மகளிர் கல்லூரி யூத் ரெட்கிராஸ் அமைப்பினர்  கபசுரக்குடிநீர் விநியோகம்

புதுக்கோட்டை ரெட்கிராஸ் சங்கம், ஜெ.ஜெ. கல்லூரி யூத் ரெட்கிராஸ், அரசு மகளிர் கல்லூரி யூத் ரெட்கிராஸ் அமைப்பினர் கபசுரக்குடிநீர் விநியோகம்

09/May/2021 05:53:16

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை ரெட்கிராஸ் சங்கம், ஜெ.ஜெ. கல்லூரி யூத் ரெட்கிராஸ், அரசு மகளிர் கல்லூரி யூத் ரெட்கிராஸ் அமைப்பினர் இணைந்து, புதிய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் ஜெ.ராஜா முகமது, இணைச் செயலாளர் சா.விஸ்வநாதன், மாவட்ட யூத் ரெட்கிராஸ் அமைப்பாளர் பேராசிரியர் தயாநிதி, அரசு மகளிர் கல்லூரி யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மாலதி மற்றும் யூத் ரெட்கிராஸ் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உலக ரெட்கிராஸ் தினம். ரெட்கிராஸ் சங்கம்என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்த சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜீன் ஹென்றி டூனாண்ட் பிறந்த நாள் இன்று. போரில் காயமுற்றவர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம்.

தற்போது எங்கெல்லாம் இயற்கைப் பேரிடர்கள் அங்கெல்லாம் ஓடிச்சென்று உதவக்கூடிய சங்கமாக உள்ளது. 192 நாடுகளில் இச்சங்கம் உள்ளது. தற்சமயம் பெரும்பாலான உலக நாடுகள் ரெட்கிராஸ் மூலம் இந்தியாவிற்கு கொரானா நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதைப் பார்க்கிறோம். இது அதன் நடு நிலைக்கும், வெளிப்படைத் தன்மைக்கும் உதாரணம் என ரெட்கிராஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Top