logo
ஊரடங்கை மீறி சுற்றியதாக ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் ஆயிரம் வழக்குகளைப் பதிவு செய்த போலீசார்

ஊரடங்கை மீறி சுற்றியதாக ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் ஆயிரம் வழக்குகளைப் பதிவு செய்த போலீசார்

17/May/2021 12:40:46


ஈரோடு, மே:  ஈரோடு மாநகர் பகுதியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக  ஒரே நாளில் ஆயிரம் வழக்குகளைப்  போலீசார் பதிவு செய்தனர். 

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், அதைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

எனினும் கொரோனா தாக்கம் குறையாததால் தமிழகத்தில் கடந்த  10 - ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் முழு ஊரடங்கு பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் இஷ்டம் போல் சுற்றி திரிந்தனர். 

ஈரோடு மாவட்டத்திலும் மக்கள் வாகனங்களில் தங்கள் இஷ்டம் போல் சுற்றி திரிந்தனர். போலீசார் நிறுத்தி காரணம் கேட்டால் ஏதாவது ஒரு காரணத்தைச்  சொல்லி சென்று விடுகின்றனர். இதையடுத்து முழு ஊரடங்கு  மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. குறிப்பாக  ஊரடங்கின் போது   தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. 


இதையடுத்து மாவட்ட  எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 9 டிஎஸ்பி-க்கள் மேற்பார்வையில் 700- க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக 13 நிலையான சோதனைச் சாவடிகள், 42 கூடுதல் சோதனைச் சாவடி களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஊரடங் கின்  போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங் களும் பறிமுதல் செய்தனர்.


 ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழுவதும் ஈரோடு மாநகர் பகுதியில் முழு ஊரடங்கின் அப்போது தேவையில்லாமல் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கார்களில் சுற்றினர். டவுன்  டிஎஸ்பி ராஜூ தலைமையில் மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க். மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு பெருந்துறை ரோடு உள்பட  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து சோதனையிட்டனர். 

இதில், ஞாயிற்றுக்கிழமநை ஒரு நாள் மட்டும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 802 வழக்குகளும், முக கவசம் உட்பட அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் வந்ததாக 226 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும் நேற்று ஒரே நாளில் 87 இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டவுன் டிஎஸ்பி ராஜூ தெரிவித்தார்.

Top