logo
உலக தொழிலாளிகள் தினம் (மே1) இன்று…

உலக தொழிலாளிகள் தினம் (மே1) இன்று…

01/May/2021 10:42:52

தொழிலாளர் தினம் அல்லது உழைப்பாளர் தினம்  என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் உழைக்கும் மக்களால் கொண்டாடப்படும் திருநாளாகும்.

இது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகிறது.

கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமையில் கொண்டாடுகின்றன. தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை  8 மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது  8 மணிநேர வேலை, 8 மணிநேர பொழுதுபோக்கு மற்றும் 8 மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்.

உழைக்கும் மக்களை மதிக்கும் வகையில்  உலகம் முழுவதும் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

 இது ஆஸ்திரேலியாவில் தான் முதலாக கொண்டாடப்பட்டலும் உலகம் முழுவதும் பரவ 33 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஒரு காலத்தில் உழைப்பு என்பது ஒருளு நாளில் 18 மணி நேரமாய் இருந்த போது அது பல போராட்டங்களை முன்னெடுத்து 10 மணி நேரமாக மாறி பின்பு ஒரு நாளுக்கு 1856 மே 1-இல்  உழைப்பு 8 மணி நேரமாக மாறியது அதாவது ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு உழைப்பு, ஒரு பங்கு, ஓய்வு, ஒரு பங்கு மன மகிழ்வுக்கான நேரம் என மாறியது.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களை  இந்த மே தினத்தில் வாழ்த்தி வணங்கி போற்றுவோம்.

Top