logo
ஈரோடு மாவட்டத்தில் 24 காவல் நிலையங்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் 24 காவல் நிலையங்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது

29/Apr/2021 08:25:54

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் 24 காவல் நிலையங்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாதிப்புக்குள்ளான வழக்குக ளை விரைவாக விசாரணை நடத்திட ஏதுவாக கடந்த வாரம் 24 போலீஸா ருக்கு இருசக்கர வாகனங்கள்  வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணைகளையும், கோப்பு களையும் எளிதாக கையாள்வதற்கு ஒவ்வொரு  காவல்நிலையத்துக்கும் மடிக்கணினி  வழங்கப் பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்திற்கு  24 மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதனையடுத்து  ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்  எஸ்பி தங்கதுரை பங்கேற்று  அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 24 காவல்நிலையங்களின் ஆய்வாளர்களிடம் மடிக்கணினிகளை வழங்கினார்.

Top