logo
  அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தல்

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தல்

26/Apr/2021 04:08:27

புதுக்கோட்டை, ஏப்:  நோய்த்தொற்று  தீவிரமடைவதைத்தடுக்கும் வகையில்   கொரோனா  அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில்  உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள்  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: 

 கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (25.4.2021)அமலாக்கப்பட்ட ஊரடங்கிற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள்  முழு   ஒத்துழைப்பை அளித்தமைக்கு மாவட்ட நிர்வாகம் நன்றி பாராட்டுகிறது.

கொரோனா  தொற்று குறித்து பொதுமக்கள் பதற்றம் அடையாமல், அதேசமயம்  மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய  சூழலை எதிர்கொள் ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அந்தவகையில் அரசால் தெரிவிக்கப்படும் வழிமுறை களின்படி மிக அவசியத்தேவை இருந்தால் மட்டுமே வெளியில் சென்றிடவும், அத்தகைய தருணங்களில் அவசியம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் ஆகியவற்றை தொடர்ந்து முறையாக பின்பற்ற வேண்டும்.

 குறிப்பாக கொரோனா  அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக  பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நோய் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரிய சிகிச்சை அளிக்கமுடியும் என்பதை பொதுமக்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 மாவட்ட நிர்வாகம் மூலம் ஒருபுறம்  கொரோனா  தொற்று பரவாமல் தடுத்திட தேவையான அளவுக்கு தடுப்பூசிகள், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருவதுடன், மறுபுறம்  கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு  உரிய சிகிச்சை அளித்திடும் வகையில் தேவையான அளவு படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் மற்றும் ஆக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சையினை 24 மணி நேரமும் கிடைத்திட உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா  நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டுத லின் படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டிருக்கும். இதற்கு பொதுமக்கள், வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

பொதுமக்கள் ஒவ்வொரு வரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு  எதிரான பாதுகாப்பு  வழிமுறைகளைப் பின்பற்றி தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ளலாம் என ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Top