logo
நிலுவை தொகையைக் கேட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே ஒப்பந்ததாரர்   உண்ணாநிலை போராட்டம்

நிலுவை தொகையைக் கேட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே ஒப்பந்ததாரர் உண்ணாநிலை போராட்டம்

23/Apr/2021 05:54:12

ஈரோடு, ஏப்: ரயில்வே நிர்வாகம் தனக்கு தர வேண்டிய நிலுவை தொகையை  வழங்கக்கோரி்  ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே ஒப்பந்ததாரர்   உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

 ஈரோடு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு ( 41). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி டிவிஷன் ரெயல்வே பயிற்சி விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். ரூ.1.25 கோடி மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்துவிட்டது.

 ரயில்வே நிர்வாகம் இதுவரை ரூ. 65 லட்சம் மட்டுமே  துரைகண்ணுவிடம்  வழங்கியுள்ளது. மீதமுள்ள  ரூ.60 லட்சம் தொகை நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக அவர் பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் அலைந்தும் பணம் கிடைக்கவில்லையாம். இதனால் வேதனையும் விரக்கியுமடைந்த   துரைக்கண்ணு வியாழக்கிழமை  காலையில்  ஈரோடு ரயில் நிலையத்திற்கு போர்வை தலையணையுடன் வந்து 3-ஆவது நடைமேடையில் திடீரென அமர்ந்து காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார்

அருகே ரயில்வே நிர்வாகம் தனக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று சுவரொட்டியையும் ஒட்டிவைத்திருந்தார். இதனால் ஈரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுதகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று துரைகண்ணுவிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்

 இதுகுறித்து  ரயில்வே ஒப்பந்ததாரர் துரைக்கண்ணு கூறியதாவது:

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்பு எனது பணிகளை நான் முடித்து விட்டேன். 20 பணியா ளர்கள் வைத்து இந்த ஒப்பந்த பணிகளை செய்து வந்தேன். ரூ 60 லட்சம் நிலுவை தொகை யை கொடுக்காமல் அலைக்கழித்து  வருகின்றனர்.

இதனால் என்னிடம் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு  ஊதியம் கொடுக்க முடியவில்லை. எனது குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஆகவே நிலுவைத் தொகை கிடைக் கும் வரை உண்ணாநிலை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை  நிலவுகிறது.

Top