logo
புதுக்கோட்டையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர், முக கவசம் விநியோகம்

புதுக்கோட்டையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர், முக கவசம் விநியோகம்

23/Apr/2021 11:19:54

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை  கலைஞர் தமிழ் சங்கத்தின் சார்பில் 10-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை  காலை 6 மணி முதல் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி வளாகம் மற்றும் விளையாட்டு திடல் பகுதியில்  நடைப்பயிற்சி செய்ய வந்த பொதமக்களுக்கு கபசூர குடிநீர் மற்றும் முக கவசம் இலவசமாக விநியோகிக்கப்பட்டது.]

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மற்றும் கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர்,செயலாளர்  . சந்திரசேகரன் தலைமையில்  நடைபெற்ற நிகழ்ச்சி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

 இதில், நகர திமுக செயலாளர் . நைனாமுகமது, பொதுக்குழு உறுப்பினர் ராம செல்வராஜ், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்  மூத்த வழக்குரைஞர் . சந்திரசேகரன்வாசகர் பேரவை செயலர் பேராசிரியர் எஸ். விஸ்வநாதன், மாருதி மோகன்ராஜ், கா.சே. மணிமாறன், தரணி ரமேஷ்.

அரசு போக்குவரத்துக்கழக திமுக தொழில்சங்க செயலாளர் வேலுசாமி, நாக மூர்த்தி, கந்தசாமி, மேகநாதன், எல்ஐ சி. எஸ் ரமேஷ், ஜி பிரகாஷ், எம்எஸ் மணிகண்டன், கே ராஜேந்திரன் , இதயம் அப்துல்லா, ராமகிருஷ்ணன், கணேசன், கவிதா மெட்டல் ஆர் முருகேசன், சையத் இப்ராஹிம், கே .எஸ் முகமது கனி, மாரிமுத்து, கே பிரபு ,எஸ் வி ஆர் ராஜா, சேவியர் பாபு  உள்பட  திரளானோர் கலந்து கொண்டனர்.

Top