logo
புதுககோட்டை அருகே குடிசை மாற்று வாரியக்குடியிருப்பு  வீடுகள் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

புதுககோட்டை அருகே குடிசை மாற்று வாரியக்குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

22/Apr/2021 11:40:40

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை அருகே வடசாரிப்பட்டி கிராமத்தில்  குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வாகனங்களை சிறைப்பிடித்து  வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல்  ஏற்பட்டது.


வெள்ளனூர் ஊராட்சிக்குள்பட்ட வடசாரிப்பட்டி, தாவுத் மில், ரங்கம்மாள்சத்திரம், முல்லை நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடம் அமைப்பதற்காக இந்த இடத்தை  ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்து வைத்தி ருந்தது. மேலும், இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் இப்பகு தி மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடிசை மாற்று வாரியம் இந்த இடத்தில் அடுக்கு மாடி வீடுகள் கட்டப் போவ தாகக்கூறி அதற்கான பணிகளை தொடங்குவதற்காக வியாழக்கிழமை வாகனங்கள் அப்பகுதிக்கு அணி வகுத்துச் செனறன. இத்தகவலறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந் தனர். இதையடுத்து பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட அந்த இடத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து , பள்ளியும் மருத்துவ மனையும்தான் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பணிக்கு வந்த வாகனங்களை சிறைப்பிடித் து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த காவல்துறை சார்பில்  அப்பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட போலீஸார்  குவிக்கப்பட்டுள்ளனர்.இப்பிரச்னை தொடர்பாக  குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் காவல்துறையினரும் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.


Top