logo
சைக்கிளை இழந்த சிறுவனுக்கு புது சைக்கிள் வாங்கிக்கொடுத்த  விஜய் மக்கள் இயக்கத்தினர்

சைக்கிளை இழந்த சிறுவனுக்கு புது சைக்கிள் வாங்கிக்கொடுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

15/Apr/2021 09:16:25

புதுக்கோட்டை, ஏப்: டியூஷனுக்கு சென்றபோது சைக்கிளை இழந்த பள்ளிச் சிறுவனுக்கு புதிய சைக்கிள் ஒன்றை அன்பளிப்பாக அளித்து  அச்சிறுவனை விஜய் மக்கள்  இயக்கத்தினர் வியப்பில் ஆழ்த்தினர்.


புதுக்கோட்டை நகராட்சியின் மேல 3 -ஆம்  வீதியில்  புதுக்கோட்டை மாவட்ட தலைமை  தளபதி விஜய்  மக்கள் இயக்க அலுவலகத்திற்கு அருகில்  டியூஷன்  படித்து வரும்  தேவா என்ற சிறுவன் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு டியூஷன் சென்று திரும்பி வந்து பார்த்தபோது  சைக்கிள்  காணாமல் போய்விட்டது.

அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுவன் தனது பெற்றோருடன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்த போதும் கிடைக்கவில்லை. விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திலும் அச்சிறுவன் தனது சைக்கிள் காணாமல்போனது குறித்து  விசாரித்து சென்றான். 

தனது சைக்கிள் தொலைந்து போன ஏக்கத்துடனும் வேதனையுடன் சிறுவன் இருந்தான். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த  விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக  புதுக்கோட்டை மாவட்டத் தலைவரும்  மற்றும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெ. பர்வேஸ்   புதிய  சைக்கிள் ஒன்றை வாங்கி   அன்பளிப்பாக வழங்கி வியப்பில் ஆழ்த்தினார். புதிய  சைக்கிள் கிடைத்த அச்சிறுவனும் தனது பெற்றோருடன் வந்து   விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும்  தெரிவித்தார்.


Top