11/Apr/2021 01:13:20
துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் கடந்த சில நாள்களுக்கு முன் காலமானார். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது மாமியார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதில் புதுக்கோட்டை மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் வள்ளியம்மாளின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.