logo
புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவேன்: புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வாக்குறுதி

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவேன்: புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வாக்குறுதி

02/Apr/2021 07:20:09

நடவடிக்கை எடுப்பேன் என்று  புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா வாக்குறுதியளித்தார்.


 

புதுக்கோட்டை நகரில் அண்ணாசிலை அருகே வெள்ளிக்கிழமை பிற்பகலில் பிரசாரம் செய்து  திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா கூறியதாவது: 


திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்த புதுக்கோட்டையை கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் 1974 -இல் தனியாக பிரித்து புதுக்கோட்டையை தனி மாவட்டமாக  உருவாக்கினார். இந்தப்பெருமை திமுகவுக்கு மட்டுமே சொந்தம்.


மேலும்,  சுமார் 2 லட்சம் மக்களையும் 42 உறுப்பினர்களையும் கொண்ட நூற்றாண்டு கண்ட  புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல்வருக்கு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற பாடுபடுவேன். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக சுமார் 1500 -க்கும் மேல்பட்ட வரலாற்றுச்சின்னங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தை உலக சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில்  வரலாற்றுச் சின்னங்களுக்கான சிறப்பு மண்டலமாக அறிவிக்க பாடுபடுவேன் என்றார் டாக்டர் முத்துராஜா.


இதைத்தொடர்ந்து கீழராஜவீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜவீதி, நெல்லுமண்டிதெரு, கீழ இரண்டாம் வீதி உள்பட நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் வாக்கு சேகரித்தார்.

 

இதில், திமுக நிர்வாகிகள் க. நைனாமுகமது, எம்.எம்.பாலு, எம்.லியாகத்அலி, அரு. வீரமணி, வழக்குரைஞர் திருஞானசம்பந்தம், சி.ஆர்.வீ. சித்ரா, காங்கிரஸ் நிர்வாகிகள் வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், ஏ. இப்ராஹிம்பாபு, டி.பென்னட்அந்தோனிராஜ், எம். தீன், சரவணன், பாரூக், மேப் வீரையா, எம்.ஏ.சேட், அப்பாஸ், கல்லூர் மகாலிங்கம், சகாயராஜ், ராஜாமுகமது, காதர்மைதீன்.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆர். முருகானந்தம், உலகநாதன், பாண்டியராஜன், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எம். ஜியாவுதீன், சி. அடைக்கலசாமி, விசிக நிர்வாகிகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட  தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு  உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

        


Top