logo
புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிர பிரசாரம்

01/Apr/2021 12:49:05

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜாபுதுக்கோட்டை நகராட்சி  மற்றும் புதுக்கோட்டை  ஒன்றியப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுக்கோட்டை தொகுதி திமுக  வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா  புதன்கிழமை காலை 6.30 மணியளவில் புதுக்கோட்டை நகராட்சியின் நிஜாம் காலனியில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கி  35,27,26,20,21  வார்டு பகுதிகளில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இதில், சாந்தநாதபுரம் மேல ராஜவீதி உள்ளிட்ட  வாக்கு சேகரித்தபோது திமுக மாவட்ட பொருளாளர் செந்தில் மற்றும் குடும்பத்தினர் வேட்பாளருக்கு முத்துராஜாவுக்கு சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர்.

இதையடுத்து பிற்பகலில், புதுக்கோட்டை ஒன்றியம் அன்னம்மாள்புரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி,  9-A நத்தம்பண்ணை, 9B நத்தம்பண்ணை, கவிநாடு (மேற்கு), கவிநாடு (கிழக்கு), திருமலைராயசமுத்திரம்  ஊராட்சிகளில் திமுக வேட்பாளர் வை.முத்து ராஜா வாக்கு சேகரித்தார். இதில், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள்  திரளாக கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். 


Top