logo
புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துராஜா பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துராஜா பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பு

27/Mar/2021 10:08:29

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா புதுக்கோட்டை நகராட்சி மற்றும் கறம்பக்குடி ஒன்றியப்பகுதியில் சனிக்கிழமை சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தார். 

புதுக்கோட்டை தொகுதி திமுக  வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா புதுக்கோட்டை நகர செயலாளர்  க. நைனாமுகமது தலைமையில் உழவர் சந்தை அருகே பிரசாரத்தைத்   தொடங்கினார். இதையடுத்து,  தொண்டைமான் நகர், ராஜகோபாலபுரம், சார்லஸ் நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, பிற்பகலில்  கறம்பகுடி ஒன்றிய செயலாளர் தலைமையில் பொன்னன் விடுதி, கணக்கன் காடு, முள்ளங்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில் வேட்பாளர் வை.முத்து ராஜா வாக்கு சேகரித்தார். இதில், நிர்வாகிகள் எம்.எம். பாலு, என். சாத்தையா, முல்லை முபாரக் மற்றும்  கூட்டணி கட்சி நிர்வாகிகள்  திரளாகக் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

Top