logo
நெசவாளர்கள் நவீன தறிகளில் வேலை செய்வதற்கான  பயிற்சி அளிக்கப்படும்: அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

நெசவாளர்கள் நவீன தறிகளில் வேலை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும்: அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதி

27/Mar/2021 08:46:47

ஈரோடு, மார்ச்: ஈரோடு மேற்கு தொகுதியில் நெசவாளர்கள் நவீன தறிகளில் வேலை செய்வதற்கான  பயிற்சி அளிக்கப்படும் என அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் உறுதியளித்தார்.

 அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், சம்பத் நகர், பெரிய சேமூர், வீரப்பன்சத்திரம், சத்தி சாலை, டீச்சர்ஸ் காலனி, நசியனுார் சாலை போன்ற பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு  சேகரித்தார்.

.அப்பகுதி வாக்காளர்களிடம் வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசியதாவது: மாநகராட்சியின் பிரதான இடமான இங்கு சாலை விரிவாக்கம் செய்து, தேவையான மின் விளக்குகள் அமைக்கப்படும். இங்கு விசைத்தறியாளர்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதியில் பஞ்சு, நுால் கழிவுகளை அகற்ற மாநகராட்சி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

இப்பகுதியில் உள்ள விசைத்தறியாளர்களுக்கு விசைத்தறி சேவை மையம் மூலம், ஊக்கத்தொகையுடன் நவீன தறிகளில் பணி செய்வது, விசைத்தறியின் அடுத்தடுத்த தொழில் சார்ந்த பயிற்சிகள், ஆயத்த ஆடைகள் உற்பத்திக்கான பயிற்சியை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம், நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். 

அடுத்த தலைமுறையினர், ஜவுளி தொழிலில் மதிப்பு கூட்டப்பட்ட பிற சுய தொழில்களை செய்ய ஏதுவாகும். ஈரோடு அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற கட்டடங்கள் கட்டப்படுகிறது. விரைவில் அங்கு சிறப்பு பிரிவுகள், சிக்கலான அறுவை சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும்.

இங்கு காப்பீடு அட்டை மூலம் கூடுதல் சேவைகளை பெற வசதி செய்து தரப்படும். அங்கு நெசவாளர்கள், முதியவர்கள் சிகிச்சை பெற சிறப்பு பிரிவு ஏற்படுத்தி தருவேன்.இவற்றை நிறைவேற்ற அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அவர்.

Top