logo
புதுக்கோட்டை தொகுதியில்  திமுக வெற்றி  வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை தொகுதியில் திமுக வெற்றி வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா வாக்கு சேகரிப்பு

25/Mar/2021 06:31:52

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை நகராட்சி  மற்றும் ஒன்றியப்பகுதிகளில் திமுக வேட்பாளர் டாக்டர் வை. முத்துராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன்   ஆலோசனைப் படி, திமுக நகர செயலாளர் க. நைனாமுகமது  தலைமையில் வியாழக்கிழமை புதுக்கோட்டை  தொகுதியின் திமுக வேட்பாளரின்  தேர்தல் பிரசார பயணம் நடைபெற்றது.


புதுக்கோட்டை  பெரியார் நகரில் உள்ள மாநில கொள்கை பரப்பு துணை அமைப்பாளர்  புதுகை விஜயா  இல்லத்தில் இருந்து  வேட்பாளர் முத்துராஜா தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார். தொடர்ந்து பூங்கா நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், சார்லஸ் நகர்  பகுதிகளில் வாக்கு சேகரித்தாக்.

இதையடுத்து பிற்பகல் 3 மணி அளவில் கறம்பகுடி ஒன்றிய செயலாளர் தலைமையில் மலையூர் அதிரான்விடுதி, வெள்ளாளவிடுதி, வலங்கொண்டான் விடுதி, கருப்பட்டி பட்டி ஆகிய ஊராட்சிகளில்  வேட்பாளர் வை.முத்து ராஜா வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலர்  வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், நகர காங்கிரஸ் தலைவர் ஏ. இப்ராஹிம்பாபு,   திமுக நிர்வாகிகள் எம்.எம். பாலு, சாத்தையா இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்  திரளாகக் கலந்து கொண்டு  வாக்கு சேகரித்தனர். 

Top