logo
நூறு சதவீத வாக்குப்பதிவு: ஈரோட்டில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு  பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவு: ஈரோட்டில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

22/Mar/2021 06:24:59

ஈரோடு, மார்ச்:சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சாா்பில் பல்வேறு வழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. கதிரவன் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் 100 சதவீத வாக்குப் பதிவு வலியுறுத்தும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பின்னர் மூன்று சக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி நகரின் முக்கிய சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது வாகனத்தில் சென்றவர்கள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உதவியாளருடன் வாக்களிக்கலாம். வாக்களிக்க மாற்றுத்திறன் நமக்கு தடையல்ல அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வு தளம் அமைக்கப்பட் டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நாம் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர். அதன் பின்னர்  எஸ்.கே.எம். நிறுவனம் சார்பில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிட்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட  ராட்டச பலூனை ஆகாயத்தில் பறக்க விட்டனர். இந்த பலூன் வாக்குப்பதிவு நாளான வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை  விண்ணில் பறக்கும்.  இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர்  பொது மேலாளர் ஹெலன் கலந்து கொண்டனர்

இதனைத்தொடர்ந்து ரங்கோலி கோலம் இட்டு வாக்காளர் விழிப்புணர்வு கும்மி பாட்டு நிகழ்ச்சியில் பார்வையிட்டனர்

Top