logo
சட்டப்பேரவை தேர்தல்: புதுக்கோட்டைதொகுதியில் போட்டியிட டாக்டர் முத்துராஜா விருப்பமனு தாக்கல்

சட்டப்பேரவை தேர்தல்: புதுக்கோட்டைதொகுதியில் போட்டியிட டாக்டர் முத்துராஜா விருப்பமனு தாக்கல்

26/Feb/2021 08:02:15

சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக்கேட்டு   வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளர்  வை. முத்துராஜா விருப்பமனு தாக்கல் செய்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான  விருப்ப மனு  அளிக்கும் முகாமில்  புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட டாக்டர் வை. முத்துராஜா  விருப்ப மனு அளித்தார்.உடன் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர் 

ஏற்கெனவே, தற்போதைய  எம்எல்ஏ- பெரியண்ணன்அரசு, மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் மணிமேகலைராஜேந்திரன், நகர திமுக செயலர் க. நைனாமுகமது, 41 -ஆவது வட்ட செயலாளர் முத்துக்கருப்பன், திருமயம் தொகுதிக்கு எஸ்.ரகுபதி எம்எல்ஏ, ஆலங்குடி தொகுதிக்கு  சிவ.வீ. மெய்யநாதன் எம்எல்ஏ, கந்தர்வகோட்டை (தனி) தொதிக்கு நகரதிமுக துணைச் செயலாளர் த.அப்புக்காளை  ஆகியோரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

     


Top