19/Mar/2021 02:38:08
புதுக்கோட்டை, மார்ச்: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) வேட்பாளர் எம்.சின்னத்துரை (19.3.2021) வெள்ளி கிழமை முற்பகலில் மணியளவில் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.கருணாகரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில், வடக்கு மாவட்ட திமுக பொருப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் , திமுக தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நிர்வாகிகள் மதிமுக தலைவர்கள் நிர்வாகிகள், மமக தலைவர்கள், நிர்வாகிகள், இமுலீ கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தவாக தலைவர்கள், நிர்வாகிகள், மநேமக தலைவர்கள் கலந்து கண்ட ஊர்வலம்,வெள்ளைமுனியன் கோவில் திடலில் இருந்து தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை சென்றனர்.