logo
ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக  சார்பில்  முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்

ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்

18/Mar/2021 09:31:56


ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு மேற்கு தொகுதியின் திமுக வேட்பாளர்  முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான சு. முத்துசாமி தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

ஈரோடு வருவாய் கோட்ட அலுவலரும்  தேர்தல் நடத்தும் அலுவலருமான  சைபுதீனிடம் மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.  கடந்த சில நாட்களாக அவர் மேற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில்  ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். 

Top