logo
புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் அறிமுக  விழா

புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் அறிமுக விழா

14/Mar/2021 10:43:27

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டையில் பாஜக நிர்வாகிகளுக்கு புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக விழா, ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ்  உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பில்  பேட்டியிடும் அதிமுக வேட்பாளரான கார்த்திக் தொண்டைமான் கலந்து கொண்ட  பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் அறிமுக கூட்டம் புதுக்கோட்டையிலுள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி வேட்பாளர் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமானுக்கு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய அயராது  பாடுபடுவது  என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதில், அதிமுக நகர செயலாளர்  க. பாஸ்கர், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான்மற்றும் பாரதிய ஜனதா கட்சி நகர பொதுச் செயலாளர் குமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Top