logo
சட்டமன்ற பொதுத்தேர்தலை  முன்னிட்டு ஈரோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ஈரோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

10/Mar/2021 03:15:19

ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன்  தலைமையில்  நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி கோலம், கும்மி பாட்டு மற்றும் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒவ்வொரு தேர்தலிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு மேற்கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்ற வாக்களிப்போம், வாக்களிப்போம் என்ற தலைப்பிலான கும்மிப்பாட்டு நிகழ்ச்சி, மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் வரைந்திருந்த 100 சதவீதம் வாக்களிப்போம் வாக்காளர் உதவி எண்-1950, தேர்தல் நாளில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்கு  பொறுப்புள்ள மக்களின் அடையாளம் வாக்களிப்பது, வாக்களிப்பது நமது கடமை, போடுங்க ஓட்டு, வாங்காதீங்க நோட்டு மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டிருந்தன.

  இத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடத்திட அனைவரும் ஒருங்கி ணைந்து பணியாற்றிட வேண்டும். மேலும் ஈரோடு மாவட்டத்தை வாக்குப்பதிவில் 100 சதவீதம் எய்திட சிறப்பாக பணியாற்றிட வேண்டும்  ஆட்சியர் சி. கதிரவன்  தெரிவித்தார்.  தொடர்ந்து, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். வாக்காளர் விழிப்புணர்வு குறித்து, திருநங்கைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின்  முதல் தளத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை உடனுக்குடன் தங்கள் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த, ஊடக மையத்தினை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதீஸ்குமார், மாவட்ட மாற்றுத்;திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், உதவி மக்கள் திட்ட அலுவலர்கள் சாந்தா, சம்பத்,.செல்லம், பாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top