logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 3,923 பேருக்கு  கொரோனா பரிசோதனைகள்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 3,923 பேருக்கு கொரோனா பரிசோதனைகள்

26/Dec/2020 06:50:08

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் முதலில் அதிகரித்து காணப்பட்டது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.

இதன்படி மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோய் பாதித்தவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் கொரோனாவால் பாதித்தவர்கள் சீக்கிரமாக குணமடைந்து வீடு திரும்பினர். 

இந்நிலையில், சனிக்கிழமை  சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்பட்டியல் படி, மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு தொற்று ஏற்பட்டது செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 479 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 46 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 444 ஆக உயர்ந்தது. தற்போது வரை மாவட்டத்தில் 292 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 143 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தினமும் 2000 கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்தி 3 ஆயிரத்து 923 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. இதற்காக மக்கள் அலட்சியமாக இருக்காமல் தொடர்ந்த அரசு அறிவித்து வரும் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றனர்.

Top