08/Mar/2021 01:26:49
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்சு சேதமடைந்தது. அதில், சென்ற தம்பதியர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் ஜாய்சன் கிருபாகரன் தம்பதியினர் பயணித்தனர். அந்தக்கார் சத்தியமங்கலம் நேரு நகர் பகுதியில் சென்றபோது பெட்ரோல் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் காரை நிறுத்திவிட்டு அவசரமாக கீழே இறங்கினர். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.