04/Nov/2020 07:03:12
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், ராமதேவம் ஊராட்சியில் ஆர்.புதுப்பாளையம் என்னும் பகுதியில் சட்ட விரோதமாக திருமணிமுத்தாறில் மணல் எடுத்து விற்பனை செய்வதாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜுக்கு புகார் வந்ததன் அடிப்படையில் திடீரென சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
அந்த
ஆய்வில் திருமணிமுத்தாறில்
இருந்து சட்ட
விரோதமாக மணல்
எடுத்து பதுக்கி
விற்பனை செய்வது
தெரிய வந்தது.
மேலும், அருகில்
உள்ள விவசாய
நிலங்களில் இருந்து சுமார் 25 அடி ஆழத்திற்கு
மேல் சட்டவிரோதமாக
மணல் எடுக்கப்பட்டதையும்
சின்ராஜ் கண்டுபிடித்தார்.
இது குறித்து
உடனடியாக கனிமவள
அதிகாரிகள், வட்டாட்சியர் மற்றும் காவல் துறை
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பந்தப்பட்ட
இடத்திற்கு வந்தனர்.
சட்ட
விரோதமாக திருமணிமுத்தாறில்
மணல் கடத்தலில்
ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டுமென அதிகாரிகளிடம்
உத்தரவிட்டார். இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய
ஜேசிபி மற்றும்
டிப்பர் லாரி
பறிமுதல் செய்யப்பட்டன.