logo
ஆலங்குடி தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆட்சியர் ஆய்வு.

ஆலங்குடி தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆட்சியர் ஆய்வு.

04/Mar/2021 08:39:32

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான  பி.உமாமகேஸ்வரி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப் பதிவை நடத்தும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், தற்பொழுது வரை 125 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமை ஆலங்குடி  சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களான கலிப்புல்லாநகர், பூவரசகுடி, கைக்குறிச்சி உள்ளிட்ட பதற்றமான  வாக்குச்சாவடிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

  இந்த ஆய்வின் போது வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதுமேலும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குச் சாவடி மையங்களுக்குச் சென்று வாக்களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சாய்தள மேடை பணியையும் பார்வையிடப்பட்டது.

இதே போன்று வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற வசதிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு கருவியினை பொதுமக்கள் பயன்படுத்துவது குறித்து ஆலங்குடி பேருந்து நிலையத்தில் மாதிரி செயல்விளக்கம் பொதுமக்கள் தொpந்து கொள்ளும் வகையில் செய்து காண்பிக்கப்பட்டது.

 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில்                      பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த ரங்கோலி கோலம் பார்வையிடப்பட்டது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து அறிவுறுத்துவதன் அடிப்படையில் வாக்காளர்கள் 100 சதவீத வாக்கினை தவறாமல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்மலர், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Top