logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் மதுபான கடத்தலைத்தடுக்க அலுவலர்கள் நியமனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் மதுபான கடத்தலைத்தடுக்க அலுவலர்கள் நியமனம்

04/Mar/2021 12:20:49


 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல்  நடத்தும் அலுவலர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

 ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி  தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 26.2.2021 பிற்பகலில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் மதுபான கடைகளில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் மதுபான கடத்தல் நடைபெறாத வகையில் முன்னேற்பாடாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக பெறப்படும் புகார்களை பெற்று மாவட்ட மேலாளருக்கு தகவல் அளிக்கும்   ஒருங்கிணைப்பு அலுவலராக (Nodal Offier) கிடங்கு மேலாளர் செல்வராஜ் (அலைபேசி எண்: 9443442295)  நியமிக்கப்பட்டுள்ளார்.


மேலும், மாவட்டம் முழுவதும் செயல்படும் மதுக்கடைகளை கண்காணிப்பதற்கான சிறப்பு மாவட்ட பறக்கும்படை அலுவலராக  உதவி மேலாளர்(கணக்கு)  லெட்சுமி நாரயணன்  (அலைபேசி எண்: 9942347104)  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அலுவலா;கள் சட்ட விரோத மதுபான விற்பனை மற்றும் மதுபான கடத்தலை தடுத்தல், மதுபானக்கடைகளின் தினசரி விற்பனையை கண்காணித்தல், மதுபானம் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தல்  முதலியவற்றிற்கான பொறுப்பு அதிகாரிகள் ஆவர். 

மாவட்டத்தில் எங்காவது சட்ட விரோத மதுவிற்பனை மற்றும் மதுபான கடத்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களை அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.


Top