logo
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு: விழிப்புணர்வு பிரசார வாகனத்தை  ஈரோடு மாவட்ட ஆட்சியர்  கொடியசைத்து  தொடங்கி வைத்தார்

சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு: விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

03/Mar/2021 08:41:52

: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்  கட்டமைக்கப்பட்ட வாக்களர்கள் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


 ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்படும் இந்த வாகனமானது  மாவட்டம் முழுவதும் சென்று பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம்  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்  மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியதாவது: மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் அலுவர்கள் அனைவரும அனைத்து வாக்குச்சாவடிகள் மையங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் பறக்கும் படையினர் உட்பட அனைத்து அதிகாரிகளும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


 இதுவரை மாவட்டத்தில் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஆவணமின்றி கொண்டு பணம் எதுவும்  பறிமுதல் செய்யப்படவில்லை.  மாவட்டத்தில் தற்போது வரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு  மாவட்டத்தில் 81 இடங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரானா தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

Top