logo
ஈரோடு மாவட்டத்தில் பரிசு பொருட்கள் வினியோகம் குறித்து பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பரிசு பொருட்கள் வினியோகம் குறித்து பறக்கும் படை, கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு

28/Feb/2021 06:58:10

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பணம்,  பரிசுப் பொருட்கள் வினியோகம் , மது வகை  உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க பறக்கும் படை, நிலை மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் போலீசார் மட்டுமின்றி வருவாய் துறை அலுவலர்களும் இடம்பெற்று உள்ளனர். இக்குழுவினர் நேற்று முதல் தங்கள் பணியை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு டி.எஸ்.பி சண்முகம் கூறியதாவது:பறக்கும் படையில் ஒரு ஷிப்டுக்கு மூவர் என 8  தொகுதிக்கு 24 போலீசார் பணியாற்றுவார்கள். இதேபோல் நிலை மற்றும் கண்காணிப்பு குழுவில் ஒரு  ஷிப்டுக்கு  3 போலீசார் என 24 போலீசார் பணியாற்று வார்கள்.

இதற்காக முதற்கட்டமாக 144 போலீசார் நேற்று முன்தினம் முதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி நெருங்கும் போது பறக்கும் படை, நிலை மற்றும் கண்காணிப்புக் குழுக் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது மேலும் 144 போலீசார் வரவழைக்கப்படுவர் என்றார் அவர்.

Top