logo
கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடையடைத்து ஆர்ப்பாட்டம்

28/Feb/2021 06:00:54

ஈரோடு, பிப்: தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும், பி.சி.ஆர் சட்டம் வழங்க வலியுறுத்தியும், சட்டப் பாதுகாப்பு கோரியும் இன்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த கோரிக்கையை வலியுறுத்திஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே 5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டும், பிசிஆர் சட்டம் வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சிவசுப்பிரமணியம், மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன் இப்படி பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Top