04/Jun/2021 05:04:16
ஈரோடு, ஜூன்: மாநகர மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் இணைப்புக்கான மாஸ்க்குகளை வழங்கினர்
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில்,
ஈரோடு மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள்
எம்.எல்.ஏ. தென்னரசு ஆகியோர்,
கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஆக்சிஜன் இணைப்புக்கான மாஸ்க்களை வழங்கினர்.
ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வரும் ஆக்சிஜனை சுவாசிக்கும் வகையில் முகத்தில் பொறுத்தப்படும் ஆக்சிஜன் மாஸ்க், 55,000 ரூபாய் மதிப்பில், 200 எண்ணிக்கையில், இணை இயக்குனர் (மருத்துவம்) கோமதியிடம் ஒப்படைத்தனர். பகுதி செயலாளர்கள் ஜெகதீசன், கேசவமூர்த்தி மற்றும் சோழாநாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.