logo
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்:ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத பேருந்துகள் இயங்கின

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்:ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத பேருந்துகள் இயங்கின

25/Feb/2021 08:35:16

ஈரோடு, பிப்:போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத பேருந்துகள் இயங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை நிர்வாக செலவிடுவதை தவிர்க்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்ற ன.இதற்கிடையே அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவது, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது, புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொமுச, சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி  உள்ளிட்ட 9 போக்குவரத்துக்கழக சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. 


இதன் காரணமாக  பேருந்துகள் முழுமையாக இயங்குமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.வியாழக்கிழமை பேருந்துகள்  வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் பணிக்கு வராத ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.


ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு காசிபாளையம், அந்தியூர், நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி , பவானி உட்பட 13  பணிமனைகளில் தினமும் 720 பேருந்துகள்  இயக்கப்பட்டு வருகின்றன. இதில்  60 சதவீதம் வெளி மாவட்டங்களுக்கும், 40 சதவீதம் உள்  மாவட்டத்திற்குள்  இயக்கப்பட்டு வருகின்றன.


  ஈரோடு மாவட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர், மற்றும் தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி  ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத பேருந்துகள்  இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்படவில்லை.

 இது குறித்து ஈரோடு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:  தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த உடனேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்ய தொடங்கி விட்டோம். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 13 பணிமனைகளில் 720 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மூலம்  பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை நேரத்தில்  600  பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வந்தது  வியாழக்கிழமை  500 -க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றனர்.

Top