logo
உணவே மருந்து.. சீத்தாப்பழம்..

உணவே மருந்து.. சீத்தாப்பழம்..

25/Feb/2021 08:46:51

பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும். ஆரம்ப நிலை காசநோயை உடலிலிருந்து நீக்கும். மற்ற வகை காசநோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது.


உடல் ஊளைச்சதை குறைக்கும், ஊளைச்சதையை குறைத்து, உடல் மெலிதாகி வனப்புடன் திகழ, சீதாப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், விரும்பிய பலன்கள் கிட்டும். கோடைத்தாகம் நீக்கும். நாவறட்சி போக்கும். கோடைக்காலங்களில் ஏற்படும், அதீத தாகம், நாக்குவறட்சி இவற்றைப் போக்கி, உடலுக்கு குளிர்ச்சிதரும் தன்மைமிக்கது சீதாப்பழம். பெரிய ஆபரேசன்கள் ஆகி, அதிக வீரியம் கொண்ட மருந்துகள் உட்கொள்வதால் உடல் உள்உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றும். மேலும், ஊறவைத்த வெந்தயத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட, குடற் புண்களையும் ஆற்றும்.


சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துப்பொருட்களால், உடலின் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தச்சோகை நோயை போக்கும், மேலும் உடல் சோர்வை போக்கி, உடலுக்கு புத்துணர்வு தரும்.சீதாப்பழங்களின் தோல்நீக்கி விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை அப்படியே அல்லது ஜூஸாக அருந்தி வர, இதய நோய்கள் யாவும் அணுகாது வாழலாம்.


சீதாப்பழத்தை இஞ்சிச்சாறு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட, அல்லது தனியே சாப்பிட்டுவர, பித்தம் தெளிந்து, மனநோய் குணமாகும். உடல் வலுப்பெற, சீதாப்பழத்தை, திராட்சைப்பழச்சாறு கலந்து ஜூசாகக் குடித்துவரலாம். இரவில் சாப்பிட, நல்ல உறக்கம் வரும். சீதாப்பழத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து பருகிவர, சிறுநீர் கடுப்பு நீங்கி, சிறுநீர் சீராக வெளியேறும்.


தலையில் அதிகம் தொல்லைக் கொடுக்கும் பேன்களை ஒழிக்க, சீதாப்பழத்திலிருந்து கூந்தல் தைலம் தயாரிக்கின்றனர். சீதாப்பழத்தை பூண்டு சேர்த்து அரைத்து, தேமல்கள் மீது பூசிவர, தேமல் மறையும்.சீதாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஜீரண கோளறு போன்ற பாதிப்புகள் ஏற்படாது. பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் போன்றவையும் ஏற்படாது.

சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் இதயத்தை பாதுகாக்கும்.


தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடனே நின்று விடும்.அறுவை சிகிச்சைக்குப் பின், சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள காயங்கள் விரைவில் ஆறிவிடும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகிவிடும்.


சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர, குடற்புண் விரைவில் குணமாகும்.

சிறுநீர் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும். உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர, ஊளைச்சதை வெகுவாக குறையும்.

சீதாபழம் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீதாப்பழத்தை தினமும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும். இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.

சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும். சீதாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி சளி  தொந்தரவு ஏற்படாமல் பாதுகாக்கிறது.சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவது தவிர்க்கப்படும்.சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு சேர்த்து நைசாக அரைத்து  தேமல் மீது பூசி வர  தேமல் மறைந்து விடும். சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.கஸ்டர்ட் ஆப்பிள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழத்தை பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இந்தபழத்தை புத்தர் தலை என்றழைக்கிறார்கள். 


ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.இத்தனை அருமை பெருமை மிக்க மருத்துவ குணம் கொண்ட இந்த பழத்தை நாம் தினமும் புசித்து நமது ஆரோக்கியத்தையும் காப்போமே. தகவல் தொகுப்பு: சங்கரமூர்த்தி- 7373141119.

Top