logo
அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மார்க்க விளக்கக் கூட்டம்

அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மார்க்க விளக்கக் கூட்டம்

20/Feb/2021 10:17:50

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்துக்கு  கிளை  தலைவர் சலீம் தலைமை வகித்தார்.  இதில் மாவட்ட தலைவர் முபாரக் அலி , மாவட்ட செயலாளர் முகம்மது மீரான்,முகம்மது ஹாரீஸ் முன்னிலை வகித்தனர் ,

இதில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உலகமே வியர்ந்து பார்க்கும் மாமனிதர் யார் இவர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்

இக்கூட்டத்தில்  பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தரவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதற்கான ஆணையத்தை உடனடியாக தமிழக அரசு  அமைக்க வேண்டும்.

உலக முஸ்லீம்களின் உயிருக்கும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தை கொச்சையாக விமர்சித்த கல்யாண ராமன் என்பவனை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் , அதே போன்று இனியும் இவர் இது போன்ற கொச்சையான பேச்சுகளை தொடராத அளவு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்.

அறந்தாங்கியில் பெரிய பள்ளிவாசல் தெரு ,காரைக்குடி சாலை, ஆவுடையார்கோவில் சாலை, வீரமாகாளியம்மன் தெரு , எல்.என்.புரம் போன்ற சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன , இதனை சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.


அறந்தாங்கியில் வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு தரும் வகையில்  சுற்றித்திரியும் தெருநாய்களால் சாலை விபத்துகள் ஏற்படுகிறது , இது மட்டுமில்லாமல் உடலில் ஒரு வகையான மர்ம தோல் நோ.ால் பாதிக்கப்பட்டு திரியும் நாய்களால் தொற்று நோய் பரவி மற்ற நாய்கள் பாதிக்கப்படுவதுடன் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கவனத்தில் கொண்டு  நகராட்சி நிர்வாகம்  இப்பிரச்னைக்கு உரிய  தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அறந்தாங்கி அப்துல் ஹமீது தெரு , மணிவிளான் தெரு போன்ற பகுதிகளில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை , மின்வாரியத்தினர் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல் மற்றும்  பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால்  பொதுமக்கள் மிகவும் சிரமத்தை கருத்தில் கொண்டு  மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அறந்தாங்கி அரசு மருத்துவமனையை சுற்று வட்டார பல கிராமங்களை சேர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் ,ஆனால் பல நேரங்களில் போதுமான மருத்துவர்கள் இருப்பதில்லை ,இதனால் நோய் நொடியோடு வரும் மக்களுக்கு மிகவும் சிரமமாகிறது , இதனை கவனத்தில் கொண்டு உரிய மருத்துவர்களை நியமிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கிளை நிர்வாகிகள் முபாரக், முகம்மது காலித், சேக்அப்துல்லா,ஜமீன்,யஹ்யா,பரீத் ஆகியோர் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக துணை செயலாளர் ரகுமத்துல்லா நன்றி கூறினார்.

Top