logo
புதுக்கோட்டை  கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் 14 -ஆவது  ஆண்டு தொடக்கவிழா

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் 14 -ஆவது ஆண்டு தொடக்கவிழா

20/Feb/2021 09:43:33

புதுக்கோட்டை, பிப்:    புதுக்கோட்டை  கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் 14 -ஆவது  தொடக்கவிழா பி.எட்  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது .

 கல்லூரியின் சேர்மன் கவிஞர் ஆர் .எம்.வீ .கதிரேசன் தலைமை  வகித்தார்.கல்லூரியின் முதல்வர் முனைவர். எம் .இளங்கோவன்  வரவேற்றார். பி .எட் , எம்.எட்  வகுப்புகள் தொடக்க விழாவையொட்டி சிறப்பு விருந்தினர், பெற்றோர்கள், மாணவ-மாணவியர்கள் குத்துவிளக்கேற்றினர்.

 சிறப்பு விருந்தினராக மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரியின் முதல்வர்    முனைவர்       சி.திருச்செல்வம்  கலந்து கொண்டு, மாணவ -மாணவியர்களுக்கு , பாடநூல்கள் மற்றும் சீருடைகள்  சென்ற பல்கலைக்கழகத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசுகள்  வழங்கி  பேசுகையில், கல்வியின் முக்கியத்துவம், ஆசிரியரின் முக்கியத்துவம் மற்றும் பெருமைகளையும் அலெக்ஸாண்டர் , சிவசுப்பிரமணிய ஐயர், கும்பகோணம் சீனிவாச சாஸ்திரி போன்றோர்களை மேற்கோள் காட்டியும்,  நேர்மறை சிந்தனையுடன் மாணவர்களை ஆசிரியர்கள் வழிநடத்தியும், சோவியத் ரஷ்யாவின் மிகப்பெரிய தலைவரான லெனின் அவர்களின் வாழ்கை வரலாற்றை தான் தூக்கிலிடப்படும் பொழுது படித்து கொண்டிருந்த பகத்சிங் அவர்களை கற்றலுக்கு மேற்கோள்காட்டியும், கடினஉழைப்பும், ஒழுக்கமும்தான் நம் வாழ்வின் மதிப்புகளை உயர்த்தும் என்றும், ஆசிரியர்  தவறு செய்தால் அது எவ்வாறு மாணவர்களின் எதிர்க்காலத்தில் பிரதிபலிக்கும் என்றும் 60% இளைஞர்களை வைத்துள்ள இந்தியாவால் எதையும் சாதித்துத்காட்டி வெற்றிபெற செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்..


 கல்லூரியின் செயலாளர் பி .கருப்பையா, தாளாளர் ஆர் .ஏ.குமாரசாமி, மன்னர் கல்லூரி பேராசிரியர் அய்யாவு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், நிறைவாக தமிழ் துறை பேராசிரியர் எம்.திருவள்ளுவன் நன்றியுரை ஆற்றினார். 

Top