logo
ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திடீர் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திடீர் பணியிட மாற்றம்

17/Feb/2021 06:24:33

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராாக செந்தில் விநாயகம் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்டிபாளையம் பகுதியில் உள்ள சாய சலவை ஆலைகள் காலிங்கராயன் வாய்க்காலில் நேரடியாக பைப்புகள் அமைத்து  சாயக்கழிவு நீரை வெளியிடுவதாக புகார்கள் வந்தன. 

இதையடுத்து, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியம், காலிங்கராயன் பாசன சபை விவசாயிகள் ஒன்றிணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 30 ஆலைகளில் கழிவுநீர் காலிங்கராயன் வாய்க்காலில் கலந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அந்த 30 ஆலைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால் சில் வைத்ததை மீறி ஒரு சில அறைகள் மீண்டும் இயக்க முயற்சி நடந்தது. 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காலிங்கராயன் பாசன விவசாய சங்கத்தினர் ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் திடீரென ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. மேலும், பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உதயகுமார், கூடுதல் பொறுப்பாக ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 


Top