logo
 ஊரடங்கு காலத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது: சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.

ஊரடங்கு காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது: சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.

28/May/2021 02:14:13

புதுக்கோட்டை, மே:  ஊரடங்கு காலத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூரில் (28.05.2021)  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி முன்னிலையில்  நடைபெற்ற மருத்துவ முகாமினை  அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  தற்போது  பேரையூரில்  மருத்துவ முகாம் தொடங்கி  வைக்கப் பட்டதுஇம்முகாமில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதுடன் கோவிட் அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையும்  செய்யப்படுகிறது.

தற்போது கொரோனா தொற்று காலத்தில் அரசின் பிற பணிகளை தவிர்த்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களை வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கோவிட் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. கோவிட் தடுப்பூசி  மிகவும் பாதுகாப்பானது. பொதுமக்கள் அச்சமின்றி கோவிட் தடுப்புபூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்.

 கோவிட் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம். நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அணுகி  கோவிட் பரிசோதனை செய்து, தொற்று உறுதியானால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வில்லா ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வாகனங்கள் மூலம்  வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறதுஊரடங்கு காலத்தில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனவே பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின் போது அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாது பின்பற்ற வேண்டும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.

இதையடுத்து, திருமயம் வட்டம், லேணா விலக்கு அகதிகள் முகாம் மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட் நிவாரண உதவிகளை  வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலா; பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன்வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொது சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, ஆர்டிஓ தொண்டு நிறுவன இயக்குநர் குழந்தைவேலு உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  

Top