logo
கொரோனா காலத்தில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஆசிரியர் தகுதி  தேர்வில்  பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு:  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கொரோனா காலத்தில் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

16/Feb/2021 09:57:33

ஈரோடு பிப்: கொரோனா காலத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர் தகுதி  தேர்வில்  பங்கேற்காதவர்களுக்கு மீண்டும்  தேர்வெழுத வாய்ப்பு வழங்குவது குறித்தி ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

 

 ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அம்மா மினி கிளினிக்கை  திறந்து வைத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.


 பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: பொதுத்தேர்வு அறிவிப்பு முதலமைச்சர் ஒப்புதல் பெற்று விரைவில் வெளியிடப்படும்.உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு உண்டான ஆய்வு நடைபெற்று கொண்டிருக்கிறது .விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.


அரசு வருவாய்துறையின் மூலமாக குளங்கள், குட்டைகள், ஏரிகளின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இண்டாம் கட்டமாக பணிகளை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்த கேள்விக்கு தற்போது பதில்  அளிப்பது சரியாக இருக்காது என்றார்.


 உருது பள்ளிகள் பொறுத்தவரை உருது படித்த பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளதால் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை கொண்டு நிறைவேற்றி வருகிறோம். 6,7,8 பள்ளி திறப்பு குறித்து மருத்துத்வதுறை, கல்வியாளர்கள், பெற்றோர்கள் கூறுகின்ற கருத்துகளுக்குப் பிறகே பள்ளி திறப்பது குறித்து மறு பரிசீலனை செய்யப்படும். ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள டிஆர்பி தேர்வில் கொரோனா காலத்தில் 45 வயதிற்கு மேல் எழுத முடியாமல் போனவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேணடும் என்ற கோரிக்கை வந்துள்ளது. அதுகுறித்து துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகிறோம்.


 டெட் தேர்வில் 13,14,17 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 82ஆயிரத்திற்கும் மேல் என்றும் அதில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த சமநிலையை கருத்தில் கொண்டு எந்தெந்த இடங்களில் பணிகள் காலியாக இருக்கிறதோ அதற்கேற்ப பணிகள் நிரப்பப்படும் என்றார்.

Top