logo
நிறைவேறியது தேவேந்திர வேளாளர் கோரிக்கை : கருப்புச்சட்டையை கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு மாவட்ட தமமுக நிர்வாகிகள்

நிறைவேறியது தேவேந்திர வேளாளர் கோரிக்கை : கருப்புச்சட்டையை கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு மாவட்ட தமமுக நிர்வாகிகள்

14/Feb/2021 06:23:27

ஈரோடு, பிப்:   தமிழக மக்கள் முன்னேற்ற கழகக்தின்  40 ஆண்டுகால போராட்டத்தின் எதிரொலியாக  7  உள்பிரிவினரை ஒன்றிணைத்து   தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வலியுறுத்தி பெ.ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தினர்  இதுநாள் வரை(460 நாள்கள்) கருப்புச்சட்டை அணிந்து அறவழியில் போராடி வந்தனர். இந்நிலையில், இந்தக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை வரவேற்று  அக்கட்சியினர் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு கருப்புச்சட்டையை கழற்றி ஈரோட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக்கழக ஈரோடு மாவட்டத்தலைவர் அ. செல்வராஜ், செயலர் மயில்துரையன் ஆகியோர் கூறியதாவது: தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின்  தலைவர்  பெ.ஜான்பாண்டியன் தலைமையிலான நீண்டகால போராட்டம் மற்றும் கடந்த 460 நாள் தொடர் கருப்புச்சட்டை போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக  தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கோரிக்கையை தொடர்பாக  தமிழகஅரசு செய்த பரிந்துரையை ஏற்று அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு  மத்திய அரசு மக்களவையில்  மசோதா தாக்கல் செய்ததோடு மத்திய அரசு கோரிக்கையை ஏற்றுக் கொண்டு  நிறைவேற்றப்படும் என   பிரதமர் நரேந்திர மோடி  ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) சென்னையில் நடந்த விழாவில் அறிவித்துள்ளார். 


இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள கட்சித்தலைவர் பெ. ஜான்பாண்டியன்  கருப்புச்சட்டை அறவழிப் போராட்டத்தை  வெற்றியோடு நிறைவு செய்வதாக அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து  தமிழகம் முழுவதும் இருக்கின்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட நிர்வாகிகள்   அந்தந்த மாவட்டத்தில் ஓரிடத்தில் கூடி பிரதமர்,தமிழக முதல்வர் ஆகியோருக்கு  நன்றி தெரிவித்து  மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வெற்றியுடன் போராட்டத்தை நிறைவே செய்தனர்.


அதே போல, ஈரோட்டிலும்  தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் ஒன்று திரண்டு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்தும், செய்தி, ஊடவியலாளர்கள் முன்னிலையில் கருப்புச் சட்டையை கழட்டி மாற்று உடை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தொடர் போராட்டத்தை நிறைவு செய்ததாகவும் தெரிவித்தனர்.


Top