logo
ஈரோட்டில் மீண்டும் சின்ன வெங்காயம் விலை உயர்வு

ஈரோட்டில் மீண்டும் சின்ன வெங்காயம் விலை உயர்வு

13/Feb/2021 01:41:29


ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை கிலோ100 ரூபாயை தாண்டி விற்பனையான நிலையில், அதன் பின் விலை குறைந்து கடந்த மாதம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

 இந்நிலையில் மீண்டும் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் 80 ரூபாய்க்கு சின்ன வெங்காயம் விற்கப்பட்டது. இது மேலும் உயர்ந்து இன்று சில்லறை விற்பனையில் கிலோ 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.உற்பத்தி குறைந்து வரத்து இல்லாததால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பெரிய வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சமையலுக்கு அத்யாவசியமான சின்ன வெங்காயம் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Top