logo
புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காட்டில் ரூ.75 லட்சத்தில்  சுயஉதவிக்குழு கட்டிடத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காட்டில் ரூ.75 லட்சத்தில் சுயஉதவிக்குழு கட்டிடத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல்

11/Feb/2021 11:08:12

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மேற்பனைக்காட்டில்  ரூ.75 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு  சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார்

இதையடுத்து அமைச்சர் கூறியதாவது: பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற  நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்பனைக்காடு கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த சுயஉதவிக்குழு கட்டிடப் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்பொழுது பொதுமக்கள் தங்களது இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம். இதேபோன்று இப்பகுதி பொதுமக்களுக்கு பேருந்து வசதி, குடிநீர் மின்விளக்கு  போன்ற பல்வேறு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற விவசாயிகளின் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  கூட்டுறவு கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின்  நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று காவிரி வைகை - குண்டாறு இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவேற்ற படும்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறும். மேலும் இப்பகுதி பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், அறந்தாங்கி எம்எல்ஏ  இ.ஏ.இரத்தினசபாபதி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்..

Top